புற்று மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா


புற்று மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா
x

குளித்தலை அருகே மண்மேட்டு புற்று மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கரூர்

ஆடி திருவிழா

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே திம்மம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கணக்கப்பிள்ளையூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மண்மேட்டு புற்று மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் ஆடிமாத திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் நேற்று குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் புனித நீராடி,நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக தீர்த்தக்குடம், பால்குடம், கரும்பு தொட்டில் மற்றும் அலகு குத்திக்கொண்டு குளித்தலை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கணக்கப்பிள்ளையூரில் உள்ள புற்று மாரியம்மன் கோவிலை சென்றடைந்தனர்.

சிறப்பு பூஜை

பின்னர் அங்கு புற்று மாரியம்மனுக்கு பக்தர்கள் எடுத்து சென்ற பால் மற்றும் தீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கணக்கப்பிள்ளையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும்அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story