திருச்செந்தூர் கோவிலில் கியூ.ஆர். கோடு மூலம் காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகம்
திருச்செந்தூர் கோவிலில் கியூ.ஆர். கோடு மூலம் காணிக்கை செலுத்தும் வசதியை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அறிமுகம் செய்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கியூ.ஆர்.கோடு மூலமாக நன்கொடை மற்றும் உண்டியல் காணிக்கை செலுத்தும் முறையை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அறிமுகம் செய்தது.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் விதமாகவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நன்கொடை மற்றும் உண்டியல் காணிக்கையை விரைவு பதில் குறியீடு (கியூ.ஆர். கோடு) மூலமாக செலுத்தும் முறையினை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அறிமுகம் செய்தது.
கோவில் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு வங்கியின் தலைமை நிதி அதிகாரி கிருஷ்ணன், சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் செயல் அலுவலர் ராம சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மண்டல மேலாளர் சுந்தரேஷ்குமார் வரவேற்றார்.
கியூ.ஆர்.கோடு வசதி அறிமுகம்
வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் கியூ.ஆர். கோடு வசதியை தொடங்கி வைத்து பின்னர் பணம் எண்ணும் எந்திரத்தை கோவிலுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள், கோவில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஒரு தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகமாக கொண்ட இந்த வங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்த வங்கி தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. மேலும் இந்த வங்கியானது இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 530 கிளைகள், 12 மண்டல அலுவலகங்களின் மூலம் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.