சாலையோர வியாபாரிகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்ய 'க்யூ ஆர் கோடு'


சாலையோர வியாபாரிகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்ய க்யூ ஆர் கோடு
x

அரக்கோணத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்ய க்யூ ஆர் கோடு தகவல் பலகை வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி எல்லைக்குட்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு பாரத பிரதமரின் ஸ்வநிதி திட்டம் மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய 'க்யூ ஆர் கோடு' தகவல் பலகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் லதா முன்னிலை வகித்தார்.

நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி, நகரமன்ற துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ் ஆகியோர் சாலையோர வியாபாரிகளுக்கு 'க்யூ ஆர் கோடு' தகவல் பலகையினை வழங்கினர்.

இதில் தி.மு.க. நகரமன்ற குழு தலைவர் துரை சீனிவாசன், நகரமைப்பு ஆய்வாளர் மற்றும் சமுதாய அமைப்பாளர்கள் உள்பட சாலையோர வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story