நெல்லை மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த 'கியூஆர் கோடு'
நெல்லை மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை வீட்டில் இருந்தவாறு செலுத்தும் வகையில் ‘கியூஆர் கோடு’ உருவாக்கப்பட்டு உள்ளது. அதனை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்.
நெல்லை மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை வீட்டில் இருந்தவாறு செலுத்தும் வகையில் 'கியூஆர் கோடு' உருவாக்கப்பட்டு உள்ளது. அதனை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்.
'கியூஆர் கோடு'
நெல்லை மாநகராட்சி சார்பாக, பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறே மாநகராட்சி தொடர்பாக குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற சேவைகள் குறித்து தெரிவிப்பதற்கும், சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்ற வரிஇனங்களை செலுத்துவதற்கு வசதியாகவும் ஒவ்வொரு வீட்டுக்கும் 'கியூஆர் கோடு' (QR Code) வழங்கப்பட உள்ளது. இதன் முதல்கட்டமாக வீடுகளுக்கு கியூஆர் கோடு பதிவு செய்யப்பட்ட பிளாஸ்டிக் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை பாளையங்கோட்டை பெருமாள்புரம் 42-வது வார்டு என்.எச். காலனியில் நடைபெற்றது.
மேயர் தொடங்கி வைத்தார்
மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி, அங்குள்ள வீடுகளில் கியூஆர் கோடு அட்டையை வீடுகளில் ஓட்டி தொடங்கி வைத்தார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசில்லா, மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் சரோஜா, மேலப்பாளையம் உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா, கவுன்சிலர்கள் பொன் மாணிக்கம் ஜான், சகாய மேரி ஜூலியட், நித்திய பாலையா, சுந்தர், நெல்சன் மணித்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.