நீச்சல் பயிற்சிக்கு இன்று தகுதி தேர்வு
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சிக்கு இன்று தகுதி தேர்வு நடக்கிறது.
திருநெல்வேலி
கேலோ இந்தியா விளையாட்டு மையம் என்ற திட்டத்தின் கீழ் நீச்சல் விளையாட்டு தேர்வு செய்யப்பட்டு, அதற்கான மையம் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் செயல்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் 30 முதல் 60 பேர் சேர்க்கப்பட உள்ளனர். அவர்களுக்கு காலை மற்றும் மாலையில் சிறப்பு பயிற்றுனர்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் சேருவதற்கான தகுதி தேர்வு இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
இந்த தகவலை நெல்லை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story