பேரூராட்சி டிரைவரிடம் தகராறு


பேரூராட்சி டிரைவரிடம் தகராறு
x

ஒரத்தநாட்டில் பேரூராட்சி டிரைவரிடம் தகராறு செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

ஒரத்தநாடு பேரூராட்சியில் டிரைவராக வேலை செய்பவர் மகேஷ் (வயது40). இவர் கடந்த 9-ந்தேதி சேகரிக்கப்பட்ட குப்பைகளை கொட்டுவதற்காக வாகனத்தை ஒட்டி சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அய்யப்பன், குட்டி, சரவணன் ஆகிய 3 பேரும் பேரூராட்சி டிரைவர் மகேசிடம் தகராறு செய்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஒரத்தநாடு பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பன், குட்டி, சரவணன் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.


Next Story