விவசாயம் சார்ந்த கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு


விவசாயம் சார்ந்த கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு
x

விவசாயம் சார்ந்த கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா உறுதி அளித்தார்.

தஞ்சாவூர்

தஞ்சை தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாய கணக்குகள் தணிக்கையானது (ஜமாபந்தி) கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா தலைமையில் 5 நாட்கள் நடைபெற்றது. இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், விலையில்லா வீட்டுமனைப்பட்டா மற்றும் பல்வேறு கோரிக்கைகள் சார்ந்த மொத்தம் 635 மனுக்கள் பெறப்பட்டன.இதில் 160 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டன. நிலுவையில் உள்ள மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார். வருவாய் தீர்வாயத்தின் இறுதிநாளான நேற்று விவசாயிகளுக்கான கூட்டம் நடத்தப்பட்டு, விவசாயம் சார்ந்த இதர கோரிக்கைகள் தொடர்பாக விரைவாக தீர்வு காணப்படும் என கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்தார்.


Next Story