பா.ராமச்சந்திரஆதித்தனார் சிலைக்கு இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை
காயாமொழியில் 9-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பா.ராமச்சந்திரஆதித்தனார் சிலைக்கு இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருச்செந்தூர்:
'மாலை முரசு' அதிபர் மறைந்த பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 9-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூர் அருகே காயாமொழியில் உள்ள பா.ராமச்சந்திர ஆதித்தனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு 'மாலை முரசு' நாளிதழ் மற்றும் 'மாலை முரசு' தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவிடத்திலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
ராமச்சந்திர ஆதித்தனார் மணிமண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தொழில் அதிபர் பிரேம் வெற்றி, ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், ராகவ ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், காயாமொழி கூட்டுறவு சங்க தலைவர் தங்கேச ஆதித்தன், ராதாகிருஷ்ண ஆதித்தன், சுந்தரகுமார் ஆதித்தன், திருநாவுக்கரசு ஆதித்தன், ஜெயக்குமார் ஆதித்தன், ராஜன் ஆதித்தன், குமரேச ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன், தணிகேச ஆதித்தன், பாலதண்டாயுதபாணி ஆதித்தன், பகவதி ஆதித்தன், அசோக் ஆதித்தன், நாகபாண்டி ஆதித்தன், ராஜேஷ் ஆதித்தன், விக்ரம் ஆதித்தன், சரவணன் ஆதித்தன், ராமானந்த ஆதித்தன், சண்முகானந்த ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், ஜெயேந்திர ஆதித்தன், கார்த்திகேய ஆதித்தன், ஞானராஜ், அமிர்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா, மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் பா.ராமச்சந்திர ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
------