வெறிநாய் கடியால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை- கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்


வெறிநாய் கடியால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை- கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
x

தஞ்சை மாவட்டத்தில் வெறிநாய் கடியால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் வெறிநாய் கடியால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

கருத்தடை அறுவை சிகிச்சை

தஞ்சையை அடுத்த மாதாக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மிருகவதை தடுப்பு சங்க கட்டிடத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செல்லப்பிராணிகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நேற்று தொடங்கியது. இதனை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக தஞ்சை மாவட்டத்தில் தான் மிருகவதை தடுப்பு சங்கத்திற்கு (எஸ்.பி.சி.ஏ.) கட்டிடம் உள்ளது. 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தின் ஒரு பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகளை தடுக்க...

இது போன்று வெறிநாய் கடியால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாதாக்கோட்டையில் உள்ள மிருகவதை தடுப்பு சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் கருத்தடை அறுவை சிகிச்சைக்கான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு ஏற்கனவே செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள கடந்த மாதம் திட்டமிடப்பட்டு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. செல்லப்பிராணிகள் வளர்ப்போர் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் ஊராட்சிகள், நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தினரும் தெருநாய்களை பிடித்து வந்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

10 நிமிடத்தில்...

இங்குஆண் நாய்களுக்கு 10 நிமிடத்திலும், பெண் நாய்களுக்கு 25 நிமிடத்திலும் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்களை சில நாட்கள் அங்கு வைத்து பராமரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி முதல்வர் நர்மதா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வம், உதவி இயக்குனர் சையத்அலி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பிரேமலதா, மிருகவதை தடுப்பு சங்க அலுவலர் சாரா உறுப்பினர்கள் எட்வர்ட் ஆரோக்கியராஜ், முகமதுரபி, விஜயலட்சுமிபாரதி, சதீஷ்குமார், ராகவி, கால்நடை உதவி மருத்துவர் செரீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story