வெறிநோய் தடுப்பூசி முகாம்


வெறிநோய் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூரில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

திருவாரூர்

கோட்டூர்:

கோட்டூர் கால்நடை மருந்தக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். கால்நடை டாக்டர்கள் சந்திரநாதன், சந்திரன், கால்நடை ஆய்வாளர்கள் சரபோஜி, கனிமொழி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பிரேமா, சண்முகப்பிரியா, பிரியதர்ஷினி, செயற்கை முறை கருவூட்டாளர் விருதாச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தினா்.


Next Story