வெறிநோய் தடுப்பூசி முகாம்


வெறிநோய் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

திருவாரூர்

வலங்கைமான்:

வலங்கைமான் அருகே சந்திரசேகரபுரம் கால்நடை ஆஸ்பத்திரி சார்பில், சந்திரசேகரபுரம் உயர்நிலைப்பள்ளியில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் கால்நடை டாக்டர்கள் சக்திவேல், சங்கவி, சவுந்தர்யா குணசெல்வன் கலந்துகொண்டு 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தினர். முதுநிலை கால்நடை டாக்டர்கள் ராஜ்யகொடி, தன்ராஜ் ஆகியோர், மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு வெறிநோய் பரவல் முறை மற்றும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் வீடுகளில் நாய் வளர்ப்பவர்கள், தங்களுக்கு அருகாமையில் உள்ள கால்நடை மருந்தகங்களில் தங்கள் நாய்களுக்கு 3-வது மாதம், அதன்பின் வருடத்திற்கு ஒருமுறை இந்த வெறிநோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர். இந்த முகாமில், பள்ளி ஆசிரியர்கள், மாணவ -மாணவிகள், பொதுமக்கள் மற்றும் கால்நடை மருந்தக உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story