பொள்ளாச்சி ஜோதி நகரில் வெறிநாய் தடுப்பூசி முகாம்
பொள்ளாச்சி ஜோதி நகரில் வெறிநாய் தடுப்பூசி முகாம்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே ஜோதி நகரில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறிநாய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். பொதுமக்கள் நாய்களை வீட்டில் இருந்து கொண்டு வந்து தடுப்பூசி செலுத்தி சென்றனர். விழாவில் மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி, உதவி இயக்குனர் ஓம்முருகன் மற்றும் டாக்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வெறிநாய் என்பது ஆண்டிற்கு சற்று குறைத்து மதிப்பிட்டால் கூட 50 ஆயிரம் மனித உயிர்களை பலி கொள்கிறது. நாய்க்கடி மட்டுமன்றி வெறிநாய் கண்டன பூனையின் கீறலின் மூலமும் வெறிநாய் பரவ வாய்ப்பு உள்ளது. நாயின் படி போன்று வீரியமிக்கது பூனையின் கீறலாகும். நாய் கடித்த இடத்தில் கட்டு போட கூடாது. கடிபட்ட இடத்தை நன்றாக தண்ணீர் விட்டு கழுவி கிருமி நாசினிகள், சோப்புகள் கொண்டு குறைந்தது 10 நிமிடம் சுத்த செய்த வேண்டும். உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். கடித்த நாயை அடித்து கொன்று விடாமல் கால்நடை டாக்டரின் ஆலோசனைப்படி தனி அறையில் வைத்து 10 நாட்கள் கவனித்து வெறிநோயின் அறிகுறி உள்ளதா என்று கண்காணிக்க வேண்டும். வெறிநோய்க்கு எதிரான தடுப்பூசி போடுவதால் நோய் பரவலை தடுக்க முடியும். முகாமில் சுமார் 150 நாய்களுக்கு வெளிநாய் தடுப்பூசி போடப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.