மாட்டுவண்டி பந்தயம்
முதுகுளத்தூர் பகுதியில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் 2 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. நல்லூர் ஆவணி பொங்கல் மற்றும் பேச்சியம்மன் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி 2 பிரிவுகளாக மாட்டுப் பந்தயம் நடைபெற்றது. இதில் 42 மாட்டு வண்டி பந்தய வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இதில் ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டி பந்தய வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் தூத்துக்குடி விஜயகுமார் வண்டி முதல் பரிசும், சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் சித்திரங்குடி ராமமூர்த்தி வண்டி முதல் பரிசை பெற்றது. மேலும் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்க பரிசு, நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை நல்லூர் கிராம நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். இதில் நல்லூர், முதுகுளத்தூர், அபிராமம், கமுதி, கடலாடி, அதை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து பார்வையிட்டனர்.