போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் பஸ்கள்


போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் பஸ்கள்
x

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் பஸ்கள்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்து நிலையம் சமீபத்தில் திறக்கப்பட்டது. பணி நடைபெற்ற காலங்களில் தாராபுரம், கோவில்வழி ஆகிய ஊர்களுக்கு செல்லும் தற்காலிக பஸ் நிறுத்தம் தாராபுரம்சாலை பிரிவில் அமைக்கப்பட்டது. தற்போது பஸ் நிலையம் திறக்கப்பட்டதால் பெரும்பாலான பஸ்கள் பஸ் நிலைத்துக்குள் மட்டுமே சென்று பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டு வருகின்றன. ஆனால் ஒருசில பஸ்கள் மட்டும் தற்காலிக பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பயணிகளையும் ஏற்றிச்செல்கின்றனர். இதனால் மீண்டும் அந்த இடத்தில் போக்குவரத்து ெநரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக அந்த சாலை திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் சாலையாகும். இதனால் அந்த சாலையில் 108 ஆம்புலன்ஸ் அதிகமாக செல்லும். இந்த பஸ் நிறுத்தத்தால் ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.Next Story