வண்ணமாதேவி தெப்ப திருவிழா
சாரண்டப்பள்ளியில் வண்ணமாதேவி தெப்ப திருவிழா நடந்தது.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே சாரண்டப்பள்ளி, காளேநட்டி இடையே வண்ணம்மாதேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கிராம மக்கள் பூங்கரகம் எடுத்து வந்து சாரண்டப்பள்ளி வண்ணமா ஏரிக்கரையில் சாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட அம்மனை தேரில் அமர்த்தி சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து அங்குள்ள வண்ணம்மா ஏரியில் தெப்பம் விடும் நிகழ்ச்சி நடந்தது. தெப்பத்தை ஏரியை 3 முறை சுற்றி கொண்டு வந்தனர். இதில் தளி வட்டார வளர்ச்சி அலுவலர் விமல்ரவிகுமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் தீயணைப்புதுறை காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.