ராகவேந்திரா டிஜிட்டல் உலகம் ஷோரூம் திறப்பு


ராகவேந்திரா டிஜிட்டல் உலகம் ஷோரூம் திறப்பு
x

ஸ்ரீ ராகவேந்திரா டிஜிட்டல் உலகம் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராகவேந்திரா டிஜிட்டல் உலகம் எலக்ட்ரானிக்ஸ், மொபைல்ஸ், பர்னீச்சர்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராகவேந்திரா டிஜிட்டல் உலகம் நிறுவனத் தலைவர் டி.டி.குமார் தலைமை தாங்கி, அனைவரையும் வரவேற்றார். தொல்பொருள் ஆராய்ச்சி அலுவலர் பி.சந்திரசேகரன், ரங்கா ஓட்டல் ஜி.ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய ஷோரூமை அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி ரிப்பன் வெட்டி திறந்துவைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஸ்டாண்டர்ட் நிறுவன மேலாண்மை தலைவர் பி.ராம் பிரகாஷ் தூபே, நியூ மேன் நிறுவனத் தலைவர் ஜெ. ராமநாதன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., எல்.ஜி.டிஸ்ட்ரிபியூட்டர் பி. சேதுமாணிக்கம், விவோ டிஸ்ட்ரிபியூட்டர் பி.ஆர்.மணி, அன்பு டி.வி. சென்டர் எ.கணேஷ், பொறியாளர்கள் ஜி.பாலமுருகன், விமல், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், நகர மன்ற உறுப்பினர் டி.டி.சி. சங்கர், ஒன்றிய கவுன்சிலர் டாக்டர் லீலா சுப்ரமணியம், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் டாக்டர் என்.திருப்பதி, வேதிஸ் ஆர். நாகேந்திரன், பி.கணேஷ்மல், மின்சாரத்துறை சி.ரங்கநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

இதுகுறித்து ராகவேந்திரா டிஜிட்டல் உலகம் மேலாண்மை தலைவர் கூறுகையில் டி.வி, வாஷிங் மிஷின், ஏ.சி., மிக்ஸி, கிரைண்டர், புல்லட் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், தேக்கு மர கட்டில்கள், டைனிங் டேபிள்கள், டிரெஸ்ஸிங் டேபிள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மிகக் குறைந்த விலையில், எளிய தவணை முறை, மற்றும் ஜீரோ சதவீத வட்டி, அனைவருக்கும் நிச்சய பரிசு, தங்க காசு பரிசு மழை என அறிவித்துள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையாக டோர் டெலிவரி வசதி செய்யப்பட்டுள்ளது என கூறினார். முடிவில் வேளாண்மை இயக்குனர் டி.டி.கே.ராகுல் நன்றி கூறினார்.


Next Story