சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்


சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்
x

கல்லல் நற்கனி அம்மன் கோவில் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

கல்லல் நற்கனி அம்மன் கோவில் மண்டலாபிஷேக விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கல்லல்-காரைக்குடி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 24 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை நகரம்பட்டி வைத்தியா மற்றும் எரிச்சி கிராமத்தைச் சேர்ந்த கமல் வண்டியும், 2-வது பரிசை திருப்புவனவாசல் தங்கராஜ் மற்றும் குந்தம்பட்டு பாக்கியம் வண்டியும், 3-வது பரிசை கே.புதுப்பட்டி கவுசல்யா மற்றும் பரளி கணேசன் வண்டியும், 4-வது பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் மற்றும் அரண்மனை சிறுவயல் கருப்பாயி தங்கராஜ் வண்டியும் பெற்றன.

பின்னர் நடைபெற்ற 14 வண்டிகள் கலந்துகொண்ட சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சாத்திக்கோட்டை கருப்பையா மற்றும் குருந்தம்பட்டு பாக்கியநாதன் வண்டியும், 2-வது பரிசை திருப்புவனவாசல் தங்கராஜ் மற்றும் பீர்க்கலைக்காடு பெரியசாமி வண்டியும், 3-வது பரிசை தளக்காவூர் சசிகுமார் வண்டியும், 4-வது பரிசை சிவகங்கை புதுப்பட்டி ஆதிக்ராஜா வண்டியும் பெற்றன. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story