எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்


எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
x

சின்னபாலம்பாக்கத்தில் எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்த ஓடின.

வேலூர்

அடுக்கம்பாறை

கணியம்பாடி அருகே சின்னபாலம்பாக்கம் கிராமத்தில் காளியம்மன் உற்சவத்தையொட்டி எருது விடும் திருவிழா இன்று நடந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர், காவல்துறை மற்றும் மருத்துவ குழுவினர் விழா நடைபெறும் இடத்தில் முகாமிட்டிருந்தனர்.

காளைகளுக்கு காலை 7 மணி அளவில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கணியம்பாடி ஒன்றியக்குழு துணை தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார்.

மாவட்ட கவுன்சிலர் தேவிசிவா, தாசில்தார் செந்தில், துணை தாசில்தார் உதயகுமார், வருவாய் ஆய்வாளர் சந்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் வரவேற்றார்.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதை தொடர்ந்து எருது விடும் விழா தொடங்கியது. வேலூர், அணைக்கட்டு, ஊசூர், பென்னாத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

கால்நடை மருத்துவ குழுவிரின் பரிசோதனைக்கு பின்னர் காளைகள் ஒவ்வொன்றாக வீதியில் அவிழ்த்து விடப்பட்டது. சீறிபாய்ந்து ஓடிய காளைகளை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்து விரட்டினர்.

விழாவை காண உள்ளூர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

விழாவில் இலக்கை நோக்கி அதிவேகமாக சீறிபாய்ந்து ஓடி முதலிடம் பிடித்த காளை உள்பட உள்பட மொத்தம் 50 பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் மாடுகள் முட்டியதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.


Next Story