கோவை-திண்டுக்கல் பொங்கல் சிறப்பு ெரயில் சேவை
கோவை-திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை, பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட்டு வரும் பொங்கல் சிறப்பு ெரயிலால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இந்த ெரயில் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சிறப்பு ரயில்
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 முதல் ஜனவரி 18 வரை திண்டுக்கல்-கோயம்புத்தூர் இடையே ஒரு முன்பதிவு இல்லா சிறப்பு ெரயில் இயக்க தெற்கு ெரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.இந்த சிறப்பு விரைவு ரயில் கோயம்புத்தூரில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் சென்று சேர்கிறது.அதன்படி இந்த ெரயில் காலை 11 மணிக்கு உடுமலை ெரயில் நிலையத்தை அடைகிறது.மறு மார்க்கத்தில் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேர்கிறது. இந்த ெரயில்கள் அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி, புஷ்பத்தூர், மடத்துக்குளம், மைவாடி ரோடு, உடுமலை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய ெரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
பயணச் சீட்டுகள்
இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்தி திண்டுக்கல்லில் இருந்து திருச்சி, விருத்தாச்சலம் செங்கல்பட்டு, விழுப்புரம், சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்ல மதியம் 1.30 மணி குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ெரயிலை திண்டுக்கல்லில் பிடிக்கலாம். குருவாயூர் எக்ஸ்பிரஸ் ெரயிலில் தென் மாவட்டங்களில் இருந்து திண்டுக்கல் வரும் பயணிகள் திண்டுக்கல் ெரயில் நிலையத்தில் 2 மணிக்கு புறப்படும் திண்டுக்கல்-கோவை ெரயிலை பயன்படுத்தி மடத்துக்குளம், உடுமலை, பொள்ளாச்சி, கோவை பகுதிகளுக்கு செல்ல முடியும்.இந்த சிறப்பு ெரயில் குறித்து பலருக்குத் தெரியாத நிலையில் தற்போது இந்த ெரயிலில் கூட்டம் குறைவாகவே உள்ளது. மேலும் இந்த சிறப்பு ெரயிலில் திண்டுக்கல் சென்று அங்கிருந்து கோவை-நாகர்கோவில் ெரயில் மூலமாகவோ அல்லது சென்னை எக்மோர்-குருவாயூர் ெரயில் மூலமாகவோ திருநெல்வேலி செல்ல பயண சீட்டுகள் உடுமலை ெரயில் நிலையத்தில் விநியோகிக்கத் தொடங்கியுள்ளனர்..இனிவரும் நாட்களில் இந்த ெரயிலை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தினால் இந்த சிறப்பு ெரயிலை நிரந்தர ெரயிலாக இயக்க கோரிக்கை விடுக்கலாம்' என்று பயணிகள் கூறினர்.