கோவை-திண்டுக்கல் இடையே சிறப்பு ரெயில்


கோவை-திண்டுக்கல் இடையே சிறப்பு ரெயில்
x
திருப்பூர்


பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசம் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக முன்பதிவு வசதியில்லாத சிறப்பு ரெயில் கோவை-திண்டுக்கல் இடையே நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை), 29-ந் தேதி ஆகிய நாட்களும், வருகிற பிப்ரவரி மாதம் 4,5,6-ந் தேதிகளிலும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பொள்ளாச்சி, உடுமலை, பழனி வழியாக இயக்கப்படுகிறது.

கோவை-திண்டுக்கல் சிறப்பு ரெயில் மேற்கண்ட தேதிகளில் காலை 9.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். போத்தனூருக்கு 9.32 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு 9.52 மணிக்கும், பொள்ளாச்சிக்கு 10.15 மணிக்கும், கோமங்கலத்துக்கு 10.46 மணிக்கும், உடுமலைக்கு 11 மணிக்கும், மைவாடி ரோடுக்கு 11.09 மணிக்கும், மடத்துக்குளத்துக்கு 11.15 மணிக்கும், புஷ்பத்தூருக்கு 11.23 மணிக்கும், பழனிக்கு 11.43 மணிக்கும் சென்று சேரும்.

இதுபோல் திண்டுக்கல்-கோவை சிறப்பு ரெயில் மேற்கண்ட தேதிகளில் திண்டுக்கல்லில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரெயில் பழனிக்கு மதியம் 3 மணிக்கும், புஷ்பத்தூருக்கு 3.16 மணிக்கும், மடத்துக்குளத்துக்கு 3.19 மணிக்கும், மைவாடி ரோட்டுக்கு 3.24 மணிக்கும், உடுமலைக்கு 3.34 மணிக்கும், கோமங்கலத்துக்கு 3.48 மணிக்கும், பொள்ளாச்சிக்கு மாலை 4.20 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு 4.44 மணிக்கும், போத்தனூருக்கு 5.10 மணிக்கும் சென்றுசேரும்.

இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story