மண்டபம்-ராமேசுவரம் இடையே 31-ந்தேதி வரை ெரயில் போக்குவரத்து நிறுத்தம்


மண்டபம்-ராமேசுவரம் இடையே 31-ந்தேதி வரை ெரயில் போக்குவரத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மண்டபம்-ராமேசுவரம் இடையே 31-ந்தேதி வரை ரெயில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மண்டபம்-ராமேசுவரம் இடையே 31-ந்தேதி வரை ரெயில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

தூக்குப்பாலத்தில் சீரமைப்பு பணி

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே உள்ள ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 4 நாட்களாகவே பயணிகள் ரெயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரம் வரும் அனைத்து ரெயில்களும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய கடந்த 2 நாட்களாக ரெயில்வே பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.

31-ந்தேதி வரை ரத்து

இந்த நிலையில் தூக்குப்பாலத்தில் இன்னும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் வருகிற 31-ந்தேதி வரையிலும் மண்டபம்-ராமேசுவரம் இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து தினமும் சென்னை புறப்படும் ரெயில்கள் மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் மதுரை மற்றும் திருச்சியில் இருந்து ராமேசுவரம் வரும் பயணிகள் ரெயில்கள் வருகின்ற 31-ந்தேதி வரை ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story