ரெயில்வே கூட்டுறவு வங்கி ஊழியர் மாயம்
ரெயில்வே கூட்டுறவு வங்கி ஊழியர் மாயம் ஆனார்.
கரூர்
புன்னம்சத்திரம் அருகே உள்ள மூலிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது 45). இவர் ரெயில்வே கூட்டுறவு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயலட்சுமி (42). இந்தநிலையில் கதிரவனுக்கு மூளையில் ரத்த அடைப்பு ஏற்பட்டது. இதனால் வீட்டில் இருந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அடிக்கடி மதுகுடித்து வந்துள்ளார். இந்நிலையில் கதிரவன், ஜெயலட்சுமியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்காததால் கதிரவன் கோபம் அடைந்து வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளார். பின்னர் வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து ஜெயலட்சுமி தனது கணவரை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஜெயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான கதிரவனை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story