மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதி ரெயில்வே ஊழியர் பலி
மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதி ரெயில்வே ஊழியர் பலியானார்.
திருச்சி மாவட்டம், பொன்மலை ரெயில்வே காலனி தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் முருகன்(வயது 39). இவர் திருச்சி ரெயில் நிலையத்தில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்தார். இவர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வடக்கு தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று காலையில் திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது கச்சிப்பெருமாள் கிராமம் அருகே சென்று கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக நாய் குறுக்கே வந்ததால் அருகில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.