ரெயில்வே மேம்பால பணிகள் மும்முரம்


ரெயில்வே மேம்பால பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் ரெயில்வே மேம்பால பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

நெல்லை - தென்காசி சாலை தற்போது நான்கு வழிசாலையாக விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலையில் பாவூர்சத்திரத்தில் மட்டும் ஒரு ெரயில்வே கேட் உள்ளது. இந்த இடத்தில் ெரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலத்தின் மொத்த நீளம் 900 மீட்டர் ஆகும். ெரயில்வே கேட்டின் கிழக்குப் பகுதியில் 450 மீட்டரும், மேற்குப் பகுதியில் 450 மீட்டர் அளவு கொண்டதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் மொத்த மதிப்பீடு ரூ.40 கோடி ஆகும். இந்த பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை தமிழ்நாடு சாலை விரிவாக்க பணி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து தற்போது இந்த பாலம் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.


Next Story