1½ மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டது
நீடாமங்கலத்தில் 1½ மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
நீடாமங்கலம், ஏப்.2-
நீடாமங்கலத்தில் 1½ மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
ரெயில்வே கேட் மூடப்பட்டது
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ெரயில்வேகேட் நேற்று மாலை சுமார் 6.20 மணிக்கு மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து நீடாமங்கலத்துக்கு காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயில், திருச்சியிலிருந்து வேளாங்கண்ணி செல்லும் பாசஞ்ஜர் ரயில், மயிலாடுதுறையிலிருந்து மன்னார்குடி செல்லும் பாசஞ்சர் ெரயில், பெங்களூருவில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய ரெயில்கள் நீடாமங்கலத்துக்கு வந்து சென்றது. அதேசமயம் மன்னார்குடியில் இருந்து ஜோத்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயில் பராமரிப்பு பணிக்காக மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வந்து என்ஜின் திசைமாற்றி திருச்சி நோக்கி சென்றது.
பொதுமக்கள் அவதி
இந்த பணிகள் முடிந்தபின் ரயில்வே கேட் இரவு 7.45 மணிக்கு திறக்கப்பட்டது. 1 மணி நேரம் 25 நிமிடங்கள் ெரயில்வேகேட் மூடப்பட்டிருந்ததால் நீடாமங்கலத்தில் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். நெடுஞ்சாலை போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த அவலநிலையை போக்க நீடாமங்கலத்தில் ரெயில்வே மேம்பாலம் திட்ட பணிகளை தொடங்கி விரைவில் முடிக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.