நீடாமங்கலத்தில், 1½ மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டது
சரக்கு மற்றும் விரைவு ரெயில் போக்குவரத்து காரணமாக நீடாமங்கலத்தில், 1½ மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டனர்.
நீடாமங்கலம்;
சரக்கு மற்றும் விரைவு ரெயில் போக்குவரத்து காரணமாக நீடாமங்கலத்தில், 1½ மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டனர்.
ரெயில்வே கேட்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ெரயில் நிலையம் நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ளதால் நாள் தோறும் விரைவு ெரயில்கள், பாசஞ்ஜர் ெரயில்கள், சரக்கு ெரயில்கள் போக்குவரத்து காரணமாக ெரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி என்பது தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை சுமார் 9.45 மணியளவில் சரக்கு ெரயில் வருகைக்காக ெரயில்வேகேட் மூடப்பட்டது. காலிப்பெட்டிகளுடன் கூடிய சரக்கு ெரயில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு வந்து மன்னார்குடி செல்வதற்காக என்ஜின் திசை மாற்றும் பணி நடந்தது.
மீண்டும் மூடப்பட்டது
தொடர்ந்து விரைவு ெரயில்கள், காரைக்காலிலிருந்து நிலக்கரி ஏற்றிய சரக்கு ெரயில் போக்குவரத்து நடந்தது. அதே சமயம் நெடுஞ்சாலை வாகனங்கள் கடை வீதியில் அணிவகுத்து நின்றது. சரக்கு ெரயில் மற்றும் விரைவு ெரயில்கள் போக்குவரத்து முடிந்த பிறகு சுமார் 11.15 மணிக்கு ெரயில்வே கேட் திறக்கப்பட்டு நெடுஞ்சாலை போக்குவரத்து தொடங்கியது. இதைத்தொடர்ந்து மதியம் 12 மணியளவில் பராமரிப்பு பணி முடிந்து திருச்சியிலிருந்து மன்னார்குடி செல்லும் ஜோத்பூர் விரைவு ெரயிலுக்காக ெரயில்வே கேட் மீண்டும் மூடப்பட்டது.
பொதுமக்கள் அவதி
ஜோத்பூர் விரைவு ெரயில் என்ஜின் திசை மாற்றி மன்னார்குடி நோக்கி புறப்பட்ட பின் கேட் திறக்கப்பட்டு நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்றன. தொடர்ச்சியாக நீண்ட நேரம் ெரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் நெடுஞ்சாலை வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. உள்ளூர் மக்களும் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனா். போக்குவரத்து தடைபட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
ரெயில்வே ேமம்பாலம்
வெளியூர்களுக்கு ஆஸ்பத்திரிகளுக்கு செல்பவர்கள், அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மிகுந்த தாமதத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது. தஞ்சாவூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான இருவழிச்சாலை திட்டப்பணிகளில் ஆறுகளின் குறுக்கே பாலங்கள் கட்டும் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு சாலை போக்குவரத்து தொடங்கும் போது நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது.நீடாமங்கலம் மேம்பாலம் திட்டத்துக்கு மத்திய- மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பாலம் கட்டும் பணி தொடங்கப்படாமல் உள்ளது. இந்த பணிகளை நிறைவேற்ற தமிழக முதல்- அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.