ெரயில்வே கேட் மூடல்; பயணிகள் அவதி


ெரயில்வே கேட் மூடல்; பயணிகள் அவதி
x

ெரயில்வே கேட் மூடல்; பயணிகள் அவதி

திருவாரூர்

நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரெயில்வே கேட் மூடப்பட்டது

நீடாமங்கலத்தில் நேற்று அதிகாலை சுமார் 4.45 மணியளவில் மன்னை எக்ஸ்பிரஸ் ெரயிலுக்காக ெரயில்வே கேட் மூடப்பட்டது. அதனைத்தொடர்ந்து சென்னையிலிருந்து வந்த மன்னை எக்ஸ்பிரஸ் ெரயில் முதலாவது நடைமேடை பகுதியில் வந்து நின்றது. அப்போது மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக திருச்சிக்கு பராமரிப்பு பணிக்காக செல்லும் ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ெரயில் 2-வது நடைமேடை பகுதியில் வந்து நின்றது.

என்ஜின் திசை மாற்றும் பணி

மன்னை எக்ஸ்பிரஸ் ெரயில் மன்னார்குடிக்கு புறப்பட்டு சென்றது. ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ெரயிலில் என்ஜின் திசை மாற்றும் பணி நடந்தது. அதனைத்தொடர்ந்து தஞ்சாவூரிலிருந்து காரைக்கால் செல்லும் காலிப்பெட்டிகளுடன் கூடிய சரக்கு ெரயில் சென்றது.

இதையடுத்து திருச்சிக்கு ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ெரயில் புறப்பட்டு சென்றது. இந்த பணிகள் முடிவடைந்து சுமார் 5.35 மணிக்கு ெரயில்வே கேட் திறக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

அதன்பின் நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்ற பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் புறப்பட்டுச்சென்றது. இதனால் சுமார் 50 நிமிடங்கள் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அதிகாலையில் நெடுஞ்சாலை பயணிகள் அவதிக்குள்ளாகினர்.


Related Tags :
Next Story