ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோட்டார் சைக்கிள் பேரணி
செங்கோட்டையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது.
தென்காசி
செங்கோட்டை:
நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தெற்கு ரெயில்வே பாதுகாப்பு படையின் பொது மேலாளா் ஈஸ்வரதாஸ் உத்தரவின்படி மதுரை கோட்டத்தில் உள்ள 75 ரெயில் நிலையங்களில் ெரயில்வே பாதுகாப்பு படையின் சேவைகள் குறித்த விழிப்புணா்வு மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி செங்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வந்த மோட்டார் சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடந்த நிகழ்ச்சிக்கு செங்கோட்டை ரெயில்வே பாதுகாப்பு படையின் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துணை ஆய்வாளா் ஜார்ஜ்முல்லா், தலைமை காவலா் ஆறுமுகபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். தலைமை காவலா் காவூர்சாமி வரவேற்று பேசினார். தொடா்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையின் சேவைகள் குறித்து பொதுமக்கள் எடுத்து கூறப்பட்டது.
Related Tags :
Next Story