சுதந்திர போராட்ட வாரிசுகளை கவுரவப்படுத்திய ரெயில்வே பாதுகாப்பு படையினர்


சுதந்திர போராட்ட வாரிசுகளை கவுரவப்படுத்திய ரெயில்வே பாதுகாப்பு படையினர்
x

ஓட்டப்பிடாரம் அருகே ரெயில்வே பாதுகாப்பு படையினர்சுதந்திர போராட்ட வாரிசுகளை கவுரவப்படுத்தினர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா, சுதந்திர தின அமுத பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையாளர் அன்பரசு உத்தரவின்படி சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் கவுரவப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

மணியாச்சி ரெயில்வே பாதுகாப்பு படை சார்பாக உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஸ்சந்திரன் தலைமையில் ெரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்றனர். அங்கு வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வாரிசான வீமராஜா என்ற ஜெகவீர பாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மு துரையை சந்தித்து சால்வை மற்றும் மாலை அணிவித்து கவுரவப்படுத்தினர்.


Next Story