ரெயில்வே மஸ்தூர் யூனியன் கூட்டம்


ரெயில்வே மஸ்தூர் யூனியன் கூட்டம்
x

செங்கோட்டையில் ரெயில்வே மஸ்தூர் யூனியன் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை ரெயில்நிலைய வளாகத்தில், தெற்கு ெரயில்வே மஸ்தூர் யூனியன் செங்கோட்டை கிளை செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கிளைத்தலைவா் சாபு தலைமை தாங்கினார். செயலாளா் குமாரசாமி முன்னிலை வகித்தார். உதவி செயலாளா் ரமேஷ் வரவேற்று பேசினார். கோட்டச்செயலாளா் ஜே.எம்.ரபீக், பொது உதவி தலைவா் சுப்பையா, கோட்ட உதவி செயலாளா்கள் சபரிவாசன், ஜோதிராஜா ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் கிளை உதவி தலைவா் அகிலன், இளைஞரணி தலைவா் விக்னேஷ், செயலாளா் விக்னேஷ் மற்றும் எஸ்.ஆர்.எம்.யு. செயற்குழு உறுப்பினா்கள், நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் பொருளாளா் சந்திரகுமார் நன்றி கூறினார்.


Next Story