திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு


திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு
x

பேரளம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு செய்தார்.

திருவாரூர்

நன்னிலம்;

பேரளம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ெரயில்வே மேலாளர் ஆய்வு செய்தார்.

ஆய்வு

ஆண்டுதோறும் ெரயில் நிலையங்களை ரெயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு செய்வது வழக்கம். இதன்படி திருவாரூர் மாவட்டம் பேரளம் ெரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ெரயில்வே மேலாளர் மனிஷ் அகர்வால் ஆய்வு மேற்கொண்டார். பேரளம் ெரயில் நிலையத்தில் அதிகாரிகள் தங்குவதற்கான கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை பார்வையிட்ட ரெயில்வே கேட்ட மேலாளர் மனிஷ்அகர்வால் ெரயில் தண்டவாளங்கள், பிளாட்பாரம் மற்றும் டிக்கெட் கவுண்டர், ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ெரயில் நிலைய அலுவலர் மனோஜ்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்

கோரிக்கை மனு

இந்தநிலையில் ஆய்வு பணிக்கு வந்த திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் பேரளம் ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் பேரளம் ரயில் நிலையத்தை அனைத்து பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் உபயோகித்து வருகின்றனர். எனவே அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில் களையும் பேரளம் ரயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.


Next Story