திருச்சி கோட்ட முதுநிலை மேலாளர் ஆய்வு
பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட முதுநிலை மேலாளர் ஆய்வு செய்தாா்.
பட்டுக்கோட்டை,
பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட முதுநிலை மேலாளர் ஆய்வு செய்தாா்.
ஆய்வு
பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட முதுநிலை இயக்கக மேலாளர் எம்.ஹரி குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரெயில் நிலைய அதிகாரிகள் ஊழியர்கள், பொறியியல் பிரிவு, சிக்னல் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவு அதிகாரிகள் ஊழியர்களிடையே ரெயில்வே பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை எடுத்துரைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-இப்பகுதியில் பல ஆண்டுகளாக ரெயில் சேவை இல்லாமல் இருந்த காரணத்தால் ஆங்காங்கே கிராமப்புறங்களில் விழிப்புணர்வு இல்லாமல் பொதுமக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து கொண்டு பொழுதை கழிக்கிறார்கள். கால்நடைகளை ரெயில் பாதை அருகில் மேய்ச்சலுக்கு விடுகிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்படுகிறது.
ரெயில்களின் வேகம்
கால்நடைகள் விபத்தில் சிக்கும் போது ரெயில் என்ஜின்கள் பழுதடைந்து விடுகிறது. அடுத்த ரெயில் என்ஜின் வந்த பிறகே பயணத்தை தொடர வேண்டும். இதனால் பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள் தற்காலத்தில் அகல ரெயில் பாதையில் ரெயிலின் வேகம் அதிகமாக இருப்பதால் அவசர சூழ்நிலையில் ரெயில் ஓட்டுநர் உடனடியாக பிரேக்கை பிடித்தாலும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தள்ளி தான் ரெயில்கள் நிற்கும். ரெயில் குறைந்த வேகத்தில் சென்றாலும் உயிர் பலியை தவிர்க்க இயலாது.
செல்பி எடுக்க கூடாது
எனவே இது குறித்து பொதுமக்களிடம் ரெயில்வே துறை அதிகாரிகள், ரெயில் பயணிகள் நல சங்கங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.மனித உயிர் என்பது விலை மதிக்க முடியாது. குறிப்பாக இளைஞர்கள் ரெயில் தண்டவாளம் அருகில் பயம் அறியாமல் செல்வதும் விளையாடுவதும் செல்போனில் செல்பி எடுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். மேலும் ரெயில்வே ஊழியர்கள், சிக்னல், ரெயில் பாதைகள், ரெயில்வே கேட்டுகளை முறையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.