ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்


ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
x

கோவில்பட்டியில் ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது கூட்டத்திற்கு சிலை தலைவர் அருமைராஜ் தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் ஹரிஹர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மகளிர் அணி தலைவி பட்டம்மாள் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் சங்கச் செயலாளர் தங்கவேலு தீர்மானங்களை வலியுறுத்தி பேசினார். கூட்டத்தில்,

பாராளுமன்ற நிலை குழுவின் ரெயில்வே 110-வது அறிக்கையில் பரிந்துரைத்த தீர்மானங்களை அரசு அமல்படுத்த வேண்டும், பென்ஷன் விதிகளை முறைப்படுத்தி, வருமான வரி செலுத்துவதிலிருந்து ஓய்வூதியதாரர்களுக்கு முழு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க பொருளாளர் முருகையா நன்றி கூறினார்.


Next Story