ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
சின்னசேலத்தில் ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி
சின்னசேலம்,
சின்னசேலம் ரெயில் நிலைய வளாகத்தில் ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது. இதற்கு ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சிவாஜி, பொருளாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆறுமுகவடிவேல், லோகநாதன், இளங்கோவன், சொக்கலிங்கம், தஸ்தகீர், ஜெயராமன், நாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் கருவூல கணக்குபணிகளை மேற்கொள்ள வேண்டும், புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் உதவி செயலாளர் தங்கவேல் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story