ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு வரவேற்பு


ரெயில்வே பாதுகாப்பு   படையினருக்கு வரவேற்பு
x

கோவில்பட்டியில் ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

டெல்லியில் ஆகஸ்ட் 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ள 75-வது சுதந்திர தினவிழாவில் பங்கேற்க, மதுரை ரெயில்வே பாதுகாப்பு படையினர் 12 பேர் சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் முல்லர் தலைமையில் 6 மோட்டார் சைக்கிள்களில் மதுரையில் இருந்து டெல்லிக்கு நேற்று முன்தினம் புறப்பட்டனர்.

இவர்களை மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த், கோட்ட பாதுகாப்பு ஆணையர் அன்பரசு ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.

இவர்கள் மாலையில் கோவில்பட்டி ரெயில் நிலையம் முன்பு வந்தனர். இவர்களுக்கு ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அப்போது இந்திய ரெயில்வேயின் சாதனைகளை விளக்கி குறும்படம் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரெயில்வே பாதுகாப்பு படை உதவி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் நன்றி கூறினார்.


Next Story