ரெயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு பேரணி


ரெயில்வே   பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு பேரணி
x

தூத்துக்குடியில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.

தூத்துக்குடி

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தெற்கு ரெயில்வேயில் உள்ள 75 ரெயில் நிலையங்களில் ரெயில்வே பாதுகாப்பு படையின் சேவைகள் குறித்த விழிப்புணா்வு மோட்டார் சைக்கிள் பேரணி மற்றும் விழிப்புணர்வு காணொலி காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் ரெயில்வே பாதுகாப்பு படையினரின் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. இதில் 6 மோட்டார் சைக்கிள்களில் 12 பேர் வந்தனர். அவர்கள் விருதுநகர், செங்கோட்டை, நெல்லை வழியாக நேற்று தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்களை தூத்துக்குடி ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கண்ணன் வரவேற்றார்.

தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையின் சேவைகள் குறித்து ரெயில் பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் காணொலி காட்சி பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதன்பிறகு அவர்கள் ராமேசுவரத்துக்கு புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து மதுரை வழியாக சென்னை செல்கின்றனர். தொடர்ந்து புதுடெல்லியில் பிரசாரத்தை முடிக்கின்றனர்.


Next Story