ரெயில் நிலைய மேம்பாட்டு பணி:ராமேசுவரம்-திருப்பதி ரெயில் பாகலாவுடன் நிறுத்தம்

ரெயில் நிலைய மேம்பாட்டு பணி காரணமாக ராமேசுவரம்-திருப்பதி ரெயில் பாகலாவுடன் நிறுத்தப்படுகிறது.
தென் மத்திய ரெயில்வே மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பதி ரெயில் நிலையத்தில் ரெயில் நிலைய மேம்பாட்டு திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் 2 மற்றும் 3-வது பிளாட்பாரங்களில் விமான நிலையத்தில் இருப்பது போல மேற்கூரை அமைக்கும் பணிக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் திருப்பதி செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை வழியாக இயக்கப்படும் ராமேசுவரம்-திருப்பதி வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16780) இன்று (வெள்ளிக்கிழமை), 16, 20,21,23, 27, 28,30-ந் தேதிகளிலும், அடுத்த மாதம் 4,6 மற்றும் 10-ந் தேதிகளிலும் பாகலா ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16779) இன்று, 15, 17, 21,22,24,28,29 மற்றும் 31-ந் தேதிகளிலும், அடுத்த மாதம் 4,5 மற்றும் 7-ந் தேதிகளிலும் பாகலா ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு ராமேசுவரம் புறப்படும்.