ரூ.18 லட்சத்தில் ரெயில் நிலைய சாலை ேமம்பாடு


ரூ.18 லட்சத்தில் ரெயில் நிலைய சாலை ேமம்பாடு
x

ஆடுதுறையில் ரூ.18 லட்சத்தில் ரெயில் நிலைய சாலையை ேமம்படுத்த பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்;

ஆடுதுறையில் ரூ.18 லட்சத்தில் ரெயில் நிலைய சாலையை ேமம்படுத்த பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பேரூராட்சி கூட்டம்

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி கூட்டம் தலைவர் ம.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கமலாசேகர், நிர்வாக அதிகாரி வி.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ெரயில்வே நிலைய சாலையில் தார் சாலை அமைத்தல் பணி ரூ.18 லட்சத்திலும், ரூ. 15 லட்சம் மதிப்பில் மட்டக்கார தெரு தார் சாலை மேம்பாடு செய்ய பணி ஒப்படைப்பு வழங்குவது, தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் வளம் மீட்பு பூங்காவில் உரம் தயாரிக்கும் களம் கட்டும் பணி மற்றும் வளம் மீட்பு உலர் கழிவு கட்டிடம் கட்டுதல் ரூ 35.80 லட்சம் மதிப்பில் கட்டுவது.

மணிமண்டபம்

5-வது வார்டு திருமஞ்சன வீதி தெருவில் ரூ 9.60 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் புதுப்பித்தல் மற்றும் புதிதாக பொது நிதியில் அமைப்பது உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் பேசுகையில், முன்னாள் அமைச்சர் கோ. சி. மணிக்கு வருகிற 4-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ள நூலகம், விளையாட்டு பயிற்சி கூடம் உள்ளிடக்கிய மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் அரசு கொறடா கோவி.செழியன், எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம், உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள் என கூறினார்.


Next Story