மேலக்கல்லூரில் ரெயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணி
மேலக்கல்லூரில் ரெயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணி நடக்க இருப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி
பேட்டை:
நெல்லை அருகே உள்ள மேலக்கல்லூர் ெரயில்வே கேட் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் 7-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 10 மணி முதல் 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி வரை அம்பை, பாபநாசம், கடையம், தென்காசி, முக்கூடல், பாப்பாக்குடியில் இருந்து பேட்டை வழியாக நெல்லைக்கு வரும் வாகனங்கள் சேரன்மாேதவி, பத்தமடை, மேலச்செவல், பிராஞ்சேரி, மேலப்பாளையம் வழியாக நெல்லைக்கு செல்ல வேண்டும்.
இதேபோல் நெல்லையில் இருந்து பேட்டை வழியாக தென்காசி, முக்கூடல், பாப்பாக்குடி, அம்பை, கடையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் சுத்தமல்லி விலக்கு, கோபாலசமுத்திரம், பிராஞ்சேரி, பத்தமடை, சேரன்மாதேவி வழியாக செல்ல வேண்டும் என ெரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story