நன்னிலம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது; பருத்தி விவசாயிகள் கவலை


நன்னிலம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது; பருத்தி விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 2 July 2022 5:18 PM GMT (Updated: 2 July 2022 5:19 PM GMT)

நன்னிலம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பருத்தி விவசாயிகள் கவலை அடைந்தனர்.

திருவாரூர்

நன்னிலம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பருத்தி விவசாயிகள் கவலை அடைந்தனர்.

பருத்தி சாகுபடி

காவிரி டெல்டா மாவட்டங்களுள் ஒன்றான திருவாரூரில் விவசாயிகள் பருத்தியை அதிக அளவு சாகுபடி செய்ய தொடங்கி உள்ளனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கோடை சாகுபடியாக விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பருத்தி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நன்னிலம் அருகே உள்ள மூங்கில்குடி, சுரக்குடி, காக்கா கோட்டூர், பனங்குடி, ஆண்டிபந்தல் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 6 அளவில் திடீரென மழை பெய்தது. இதனால் பருத்தி விவசாயிகள் மிகவும் கவலை அடைந்தனர்.

இதுகுறித்து பருத்தி விவசாயி குருமூர்த்தி கூறுகையில், 'பருத்தி பஞ்சுகள் மழையில் நனைந்தால் தாம் குரைந்து வீணாகிவிடும். இதனால் விலையும் குறைய வாய்ப்பு உள்ளது' என்றார்.

நெல் சாகுபடி

அதேநேரத்தில் தற்போது பெய்துள்ள மழை நெல் சாகுபடிக்கு ஏற்றது என விவசாயிகள் கூறுகிறார்கள். திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொண்டு வருகிறார்கள். பலர் நேரடி நெல் விதைப்பு முறையில் சாகுபடி செய்து வருகிறார்கள்.

இது குறித்து நெல் விவசாயி அண்ணாதுரை கூறியதாவது, 'தற்போது பெய்துள்ள மழை நேரடி விதைப்பு செய்வதற்காக கோடை உழவு செய்வதற்கு நன்மை பயக்கும்' என்றார்.


Next Story