நாமக்கல்லில் மழை
நாமக்கல்லில் மழை பெய்தது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நாமக்கல் நகரை பொறுத்த வரையில் நேற்று காலையில் லேசான சாரல்மழை பெய்தது. 9 மணிக்கு பிறகு வழக்கம்போல் வெயில் பொதுமக்களை சுட்டெரித்தது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இரவு 8 மணி அளவில் மீண்டும் மழை பெய்தது. இந்த மழை 30 நிமிடத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த மழையால் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.நேற்று முன்தினம் மங்களபுரம் பகுதியில் அதிகபட்சமாக 8 மி.மீட்டர் மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire