ஏற்காட்டில் 30 மில்லிமீட்டர் மழை பதிவு


ஏற்காட்டில் 30 மில்லிமீட்டர் மழை பதிவு
x

ஏற்காட்டில் நேற்று முன்தினம் 30 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சேலம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் நேற்று முன்தினம் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சேலம், ஏற்காடு, ஓமலூர் பகுதியில் இரவில் பலத்த மழை பெய்தது. சேலத்தில் திடீரென பெய்த மழையால் கிச்சிப்பாளையம், பெரமனூர், குகை, அழகாபுரம், களரம்பட்டி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

ஏற்காடு-30, ஓமலூர்-28.2, சேலம்-21.6, சங்ககிரி-8.2, காடையாம்பட்டி-3.4.


Next Story