கால்வாய் கரையில் அரிப்பு
கால்வாய் கரையில் அரிப்பு ஏற்பட்டது.
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கணக்கன்குடி, கே.பெத்தானேந்தல் ஆகிய ஊராட்சிகள். கணக்கன்குடியிலிருந்து கே.பெத்தானேந்தல், மணல்மேடு செல்லும் வழியில் கானூர் கண்மாய்க்கு செல்லும் கால்வாய் உள்ளது. கால்வாய் மேலே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக பஸ், லாரி மற்றும் அனைத்து வாகனங்கள் சென்று வருகின்றன. கால்வாய் கரையின் தென்புறம் கே.பெத்தானேந்தல் காலனி உள்ளது. இப்பகுதியில் 80 குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது கால்வாயில் கண்மாய், வைகை ஆற்று தண்ணீர் இரண்டும் சேர்ந்து அதிகமாக தண்ணீர் செல்கின்றது. இந்த நிலையில் கால்வாய் பாலத்தின் ஓரத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த திருப்புவனம் தாசில்தார் கண்ணன், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு கரையின் அருகே சுமார் 5 அடி உயரத்திற்கு மணல் சாக்கு மூடைகளை அடுக்கி கால்வாய்கரை பலப்படுத்தப்பட்டுள்ளது. மணல் சாக்கு மூடை போட்டு அடுக்கியதால் காலனிப்பகுதி அருகே உடைப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.