தாளவாடியில் வீசிய சூறாவளிக்காற்றால் மின்கம்பி துண்டிப்பு


தாளவாடியில் வீசிய சூறாவளிக்காற்றால் மின்கம்பி துண்டிப்பு
x

தாளவாடியில் வீசிய சூறாவளிக்காற்றால் மின்கம்பி துண்டிப்பு

ஈரோடு

தாளவாடி

தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. பவானிசாகரில் இருந்து தாளவாடிக்கு உயர் மின் கோபுரம் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் வீசிய சூறாவளிக்காற்றால் உயர் மின் கோபுரத்தின் மின்கம்பி துண்டிக்கப்பட்டது. இதனால் தாளவாடி மலை பகுதி முழுவதும் மின்சார வினியோகம் தடைபட்டது.

நேற்று காலை மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மாலை 5 மணி அளவில் மின்வினியோகம் வீடுகளுக்கு கிடைத்தது. அதேபோல தாளவாடி போலீஸ் நிலைய வளாகத்தில் சிறிது வேகமாக காற்று வீசினாலும் விழும் நிலையில் இருந்த தைல மரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றினார்கள். இதனால் தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story