தேன்கனிக்கோட்டை பகுதியில்கனமழைக்கு 50 வீடுகளில் தண்ணீர் புகுந்தது


தேன்கனிக்கோட்டை பகுதியில்கனமழைக்கு 50 வீடுகளில் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 8 May 2023 12:30 AM IST (Updated: 8 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை பகுதியில் பெய்த கனமழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

கனமழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. அதிகபட்சமாக தேன்கனிக்கோட்டையில் 75 மில்லி மீட்டர் அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட தேர்பேட்டை சாலை 2-வது குறுக்கு தெரு முதல் 5-வது தெரு வரை உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கழிவுநீருடன் மழைநீர் புகுந்தது. மேலும் விஷஜந்துகளும் வீட்டிற்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

இதற்கிடையே அப்பகுதியில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ேஷாரூமிற்குள் மழைநீர் புகுந்தது. அப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அமைத்துள்ள கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில் கனமழை பெய்ததால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்ததாக மக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் தொட்டிக்குள் கழிவு நீருடன் மழைநீர் சென்றது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன் மற்றும் வார்டு கவுன்சிலர் மாது பழனிசாமி ஆகியோர் நேரில் சென்று நெடுஞ்சாலைத்துறையினரிடம் பேசி உரிய முறையில் கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.


Next Story