வேப்பனப்பள்ளியில் கனமழை; பொதுமக்கள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரத்திற்கும் மேல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. வேப்பனப்பள்ளி, நாச்சிகுப்பம், மாதேப்பள்ளி, பல்லேரிப்பள்ளி, தீர்த்தம், நெடுசாலை ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 2 வாரங்களாக அடிக்கடி இப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அனைத்து ஏரி, குளம், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story