பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்டநெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்


பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்டநெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடலூர்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட மைய கூட்டம் நேற்று கடலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக்குழு ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், மருதவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பருவம் தவறிய மழையால் கடலூர் மாவட்டத்தில் குமராட்சி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. குறிஞ்சிப்பாடி பகுதியில் பலத்த காற்றால் பயிர்கள் சாய்ந்துள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நவரை சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கணக்கெடுப்பு

எனவே வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுமையாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் வேளாண் துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஈரப்பதமான நெல்லை, கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையன், சுப்பராயன், ராஜேஷ் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story