மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு
மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு
நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சாய்ந்தன. நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் காடந்தேத்தி ஊராட்சியில் வயலில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்ே்பாது சேதமடைந்த நெற்பயிர்களை எடுத்து விவசாயிகள் அமைச்சரிடம் காண்பித்தனர். ஆய்வின்போது நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், உழவர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, ஆத்மா குழு தலைவர் மகா குமார், வேதாரண்யம் நகர் மன்ற தலைவர் புகழேந்தி, வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா மற்றும் வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story