அதிகபட்சமாக பூதலூரில் 44 மி.மீட்டர் மழை


அதிகபட்சமாக பூதலூரில் 44 மி.மீட்டர் மழை
x

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக பூதலூரில் 44 மி.மீட்டர் மழை பெய்தது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்றுமுன்தினம் மாலை, இரவில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மழை பெய்த போது பலத்த காற்றும் வீசியது. இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரி பின்புறம் உள்ள மகளிர் விடுதி வளாகத்தில் நின்ற மரம் முறிந்து சத்யா விளையாட்டு மைதான நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையில் விழுந்தது. இதில் விடுதி சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.தஞ்சை மாவட்டத்தில் நேற்றுகாலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு மில்லிமீட்டரில் வருமாறு:-பூதலூர்-44, திருக்காட்டுப்பள்ளி-36, வல்லம்-26, கும்பகோணம்-19, பாபநாசம்-18, திருவையாறு-8, தஞ்சை-5, கல்லணை-4, அய்யம்பேட்டை-3, குருங்குளம்-2, மஞ்சளாறு-1.


Next Story