மழை வெள்ள பாதுகாப்பு ஒத்திகை


மழை வெள்ள பாதுகாப்பு ஒத்திகை
x

மழை வெள்ள பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி தாலுகா வலையபட்டி கிராமம் அம்மன் நகரில் ஆற்றங்கரை பகுதியில் தெருவோர கலைஞர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை இணைந்து மழை வெள்ள காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது குறித்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது? அவர்களுக்கு எப்படி முதலுதவி செய்வது? உள்ளிட்ட பல்வேறு செயல்முறை விளக்கத்தை தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர்.

இதில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி, சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல் செல்வி, மண்டல துணை வட்டாட்சியர் சிவராமன், வருவாய் ஆய்வாளர் முரளி, தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் சுந்தரமூர்த்தி, கிராம உதவியாளர் ஆறுமுகம், மற்றும் தீயணைப்புத் துறையினர், மருத்துவத்துறையினர், ஊராட்சி மன்ற தலைவர் தாமரை செல்வன், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Next Story